ஒவ்வொரு நாளும், சொந்த பிரச்சினைகளையும் வேலைகளையும் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை, இதில் எங்கே இஸ்லாத்தை படிப்பது, மார்க்கத்தை தேடுவது என்ற களைப்பு சிலருக்கு... அப்படியே நேரமிருந்தாலும், எத்தனையோ புத்தகங்களை நாம் பேசும் மொழியில் மொழிப்பெயர்த்து தன் வீட்டினுல் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், நூற்றுக்கணக்கான பக்கங்களை புரட்டி மார்க்கத்தை படிப்பதா என்ற சலிப்பு சிலருக்கு..
சஹாபாக்களின் காலத்தில், மக்கள் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்க்கு பல நாட்கள் பிரயாணித்து, இன்றைக்கு நாம் அற்பமாக கருதும் செய்தியை கேட்டுத்தெரிந்து கொள்ள அம்மக்கள் காட்டிய ஆர்வம், நமக்கு இல்லாமல் போய்விட்டது என்பது வருத்தம். அவர்கள் ஆசைப்பட்டதும் நாம் ஆசைபடுவதும் அதே சுவர்க்கத்தை அடைய தான்.
இன்றைக்கு கல்வியை தேடுதலும், அந்த கல்வியை கற்பதும் இன்னும் எளிமையாகி பார்த்து-கேட்டுக்கொள்ள வீடியோக்களாகவும்.. நாம் அன்றாடம் பார்க்கும் வேலைகளுக்கிடையில் இடைஞ்சல் இல்லாமல் மார்க்கத்தை கேட்டுக்கொள்ள ஆடியோக்களாகவும், நம் உள்ளங்கை வரை வந்தாச்சு..
நம்மை உருவாக்கிய ரப்புடைய வார்த்தைகளையும், சுவர்கத்திற்க்கு வழிகாட்ட வந்த தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொற்களையும், இஸ்லாத்தையும் அறிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் இதைவிடவும் எளிமையாக இனியும் ஏற்படும் என்றால், காற்றிலுல்ல அலைவரிசைகள் அதுவாக நம் தலையில் பொருத்திய கணினிக்கு சென்று, அது நம் உள்ளத்தையும், உடலையும் செயல்படுத்தினால்தான் உண்டு, ஆனால் இஸ்லாம் மனிதனை அப்படி எதிர் பார்க்கவில்லை, ஆகவே அது நடக்காது என்றும் நினைக்கத்தோன்றுகிறது..
ஆக இந்த எளிமைகளை பயன்படுத்துவோம், மறுமையில் வெற்றி பெறுவோம்.
இந்த இணையதளம், எங்களால் முடிந்த அளவிற்க்கு இஸ்லாமிய செய்திகளை தமிழ் ஆடியோ வடிவில் தரும் ஒரு முயற்சியே..
எங்கள் இறைவா! நீ எங்களை மன்னித்து கிருபை செய்வாயாக! நீதான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்
ஸஹீஹுல் புஹாரி ஆடியோ - Sahih Bukhari Tamil MP3
ஹதீஸ்கள் 1 - 500 வரை (490 MB)
ஹதீஸ்கள் 501 - 1000 வரை (379 MB)
இது ரஹ்மத் பதிப்பகம் தமிழாக்கம்.
ஸஹீஹ் முஸ்லிம் ஆடியோ - Sahih Muslim Tamil MP3
இது ரஹ்மத் பதிப்பகம் தமிழாக்கம்.
அபூதாவூத் ஆடியோ - Adu Dawood Tamil MP3 Audio
ரியாளுஸ்ஸாலிஹீன் என்பது, புஹாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற ஆதாரபூர்வ ஹதிஸ் புத்தகங்கலிறுந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்பு .
இது சாஜிதா பதிப்பகம் தமிழாக்கம்
குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ - Tamil Quran MP3
- மூன் பதிப்பகம் தமிழாக்கம்.
கிராத்துடன் - அரபி தமிழ்
குர்ஆன் தமிழ் - அரபி கிராத்துடன் - காரி மிஷாரி அல் அஃபாஸி
குர்ஆ சூராக்களை, கருத்து முழுமைபெரும் வகையில் சுமார் ஐந்து நிமிடங்களாக பிரித்த பட்டியல் (watsapp ல் பகிர உதவலாம்)
தமிழ் மட்டும்
குர்ஆன் தமிழ் மட்டும் - ஒவ்வொரு சூராவாக
குர்ஆன் தமிழ் மட்டும் - ZIP File 1 (500 MB)
குர்ஆன் தமிழ் மட்டும் - ZIP File 2 (500 MB)
- IFT பதிப்பகம் தமிழாக்கம்.
IFT பதிப்பகம் தமிழாக்கம் (இதுவரை பதியப்பட்டவை)
குர்ஆனில் இடம்பெறும் துவாக்கள் ஆடியோ - Quranic Duas MP3
மாற்று நம்பிக்கையுடயவருக்கான ஆக்கங்கள்
சமூகம்
இஸ்லாமிய நேர நிர்வாகம்
- வாழ்க்கையின் நோக்கம், நம் நேரம் எங்கே செலவாகிறது, தினமும் சுய பரிசோதனை, கணவன் மனைவியாக நற்காரியங்களின் போட்டி மதிப்பெண்கள், ஒரு மாத சமையல் திட்டமிடல் என்பன போன்றவற்றின் ஒரு உதாரண கோப்பு இது. உங்கள் வசதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதில் சிறந்த மாற்றங்க்ள் செய்தாலோ, தங்களிடம் இப்படி சில ஃபைல்கள் இருந்தாலோ, எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாக்கங்களுக்கு உதவிய அனைவருக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைர்.
தங்கள் குறை நிறைகளையும், அலோசனைகளையும், பதிவிறக்கம் பற்றிய பிரச்சனைகளையும் தெரிவிக்க, tamilaudioislam@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் இஸ்லாமியப் பணி மேலும் வளர, இறைவனிடம் துஆசெய்யுங்கள்.
e-mail : tamilaudioislam@gmail.com
phone/watsapp : 00966557968391